வட ஆளப்பிறந்தான் பகுதியில் அமைச்சர் கொடும்பாவி எரிப்பு

விவசாயிகளுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு

Update: 2024-02-19 04:22 GMT

கொடும்பாவி எரிப்பு 

திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர் எ. வ. வேலுவை கண்டித்து வடாளப்பிறந்தான் கிராமத்தில் கொடும்பாவி எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 220 நாட்களுக்கு மேலாக மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராடி வரும் விவசாயிகளை சிறையில் அடைத்தும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைத்து தொடர்ந்து போராடிய விவசாயிகளின் மீது அவதூறு பரப்பும் நோக்கில் செயல்படும் அமைச்சரை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்தனர்.
Tags:    

Similar News