ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணி - அடிக்கல் நாட்டிய அமைச்சர்

பேரூராட்சிகள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-01-05 05:56 GMT

அமைச்சர் பேச்சு 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, சந்தைதோப்பு பகுதியில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர்குந்தியில் தார்சாலை அமைக்கும் பணிக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று அடிக்கல் நாட்டி வைத்து பேசினார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ர.குருராஜன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் கி. வீரமணி, உள்ளிட்ட பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனைவர்.சு.கீதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags:    

Similar News