பள்ளிபாளையம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்
ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் 8 புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், ஆலாம்பாளையம் பேரூராட்சி மற்றும் பள்ளிபாளையம் நகராட்சி ஆகிய பகுதிகளில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில்,
ரூ.12.80 கோடி மதிப்பீட்டில் 8 புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், அனிமூர் ஊராட்சி, பொம்மக்கல்பாளையத்தில் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம்,
ஓ.ராஜபாளையம் ஊராட்சி, கோழிகால்நத்தத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கட்டடம், குட்டிமேய்க்கன்பட்டியில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் என மொத்தம் 3 புதிய கட்டடங்களை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். தொடர்ந்து,
சிறுமொளசி, அத்திபாளையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், ரூ.49.95 இலட்சம் மதிப்பீட்டில் சாலை பணி, டி.புதுப்பாளையத்தில் ரூ.33.94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி செயலகம் கட்டும் பணி மற்றும் சிமெண்ட சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி, வரகுராம்பட்டி, அய்யக்கவுண்டம்பாளையத்தில் ரூ.30.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி,
அம்மையப்பா நகரில் ரூ.20.99 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையுடன் கூடிய வடிகால் அமைக்கும் பணி, விட்டம்பாளையத்தில் ரூ.28.27 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வேளாண் வணிக மைய கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, மேலும், ஆலாம்பாளையம் பேரூராட்சியில், பேரூராட்சிகள் துறையின் சார்பில், ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மற்றும் கழிப்பிடம் பராமரிப்பு பணி, வார்டு எண் 4, அன்னை சத்யா நகரில் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி மற்றும் பள்ளிபாளையம் நகராட்சியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் வார்டு எண் 16, காந்திபுரம் மற்றும் வார்டு எண் 13, சின்னவீதியில் தார்சாலை மற்றும் சாலைகள் மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிகளில் பள்ளிபாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எம்.சுஜாதா தங்கவேல்,
துணைத்தலைவர் ராஜபாண்டி ராஜவேல், ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் ப.சகுந்தலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் தாமரை, பொறியாளர் ரேணுகா, பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.