வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்
வேர்கிளம்பி பேரூராட்சியில் ரூ. 4.47 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சியில் சாலைகள் சீரமைப்பு, குளம் சீரமைப்பு போன்றவற்றுக்கு ₹4.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வேர்கிளம்பி பேரூ ராட்சி ஒட்டலிவிளையிலிருந்து கூடதூக்கி வழியாக மலவிளை செல்லும் சாலை சுமார் 15 ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போது சீரமைப்பு செய்ய நபார்டு திட்டத்தில் ₹2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூவன்கோடு - தாணிவிளை சாலையில் உள்ளது குமரன் குடி நெடுமானூர் குளம். இந்தகுளம் அந்த பகுதியில் சுற்று - வட்டார மக்களுக்கு பெரிதும் பயன்படுவதுடன் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி யது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் அழிந்து போகும் நிலையில் இருந்தது.தற்போது இதனை பக்கச்சுவர் கட்டி சீரமைக்க ₹48 லட்சம் - ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று கொட்டறவிளை கல்லக்காவிளை சாலை உட்பட 9 மண் சாலைகள் பேவர்பிளாக் சாலைகளாக சீரமைக்க ₹1.49 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ், திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட் உட்பட பலர் பங்கேற்றனர்