சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மனோதங்கராஜ்
விளவங்கோடு அருகே ரூ.76.77 லட்சம் மதிப்பில் நடைபெறும் திற்பரப்பு - களியல் சாலை சீரமைப்பு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
Update: 2024-03-14 06:12 GMT
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் - களியல் மாநில நெடுஞ்சாலையில் திற்பரப்பு, களியல் பகுதி களியல் ரோடு சீர்குலைந்த நிலையில் உள்ளது. ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நி லையில், களியல் முதல் திற்பரப்பு சி.எஸ்.ஐ தேவாலயம் வரையிலான இரண்டு கி.மீ., தூரம் தார் அமைத்து சீரமைக்க தமிழக அரசு 76.77 லட் சம் ரூபாய் ஒதுக்கியது.ரோடு சீரமைப்பு பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார். நெடுஞ்சாலை. துறை உதவி கோட்ட பொறி யாளர் விஜய், உதவி பொறியாளர் தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.