சோலாரில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தினை அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

அமைச்சர் முத்துசாமி ஆய்வு

Update: 2024-01-13 10:21 GMT

அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு மாநகராட்சி, சோலார் பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பேருந்து நிலையத்தின் வாயிலாக கரூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 50% நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனக்களுக்கான பார்க்கிங் வசதிகள், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ் வசதி அமைத்தல் மற்றும் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக வளாகங்கள் அமைத்தல் என பல்வேறு அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பேருந்து நிலையம், ஈரோடு மாநகராட்சி, கனிராவுத்தர் குளம் பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைக்க பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 2 பேருந்து நிலையங்களும் செயல்பாட்டிற்கு வரும் வேலையில் ஈரோடு மாநகர பகுதிகள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைவதுடன், மாநகராட்சி பகுதிகள் விரிவடைவதுடன் முழுமையான வளர்ச்சியையும் அடையும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
Tags:    

Similar News