மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அமைச்சர் நிதியுதவி
ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.;
Update: 2024-01-19 01:35 GMT
நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி வில்லம்மாள். இவர் தன்னுடைய மிளகாய் தோட்டம் செல்லும் போது அறுந்து கிடந்த மின் கம்பியில் மிதித்ததால் மின்சாரம் தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் தன் சொந்த நிதியில் அவரது குடும்பத்தாருக்கு நிதி வழங்க உத்தரவிட்டார். அமைச்சர் சார்பில் நிதியுதவி முதுகுளத்தூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி ராமர், சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் சத்தியேந்திரன் டோனிசார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் முன்னிலையில் அவரது குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.