ஆண்டாள் கோவிலில் அமைச்சர் சாமிநாதன் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-01-02 03:32 GMT
 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மற்றும் கிளி வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்ணாடிக்கிணறு, கண்ணாடி மாளிகை, ஆண்டாள் பிறந்த நந்தவனம், வடபத்ர சயனர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர் கோவிலுக்கு வந்திருந்த ஐயப்ப சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடன் குழுவாக போட்டோ எடுத்துக் கொண்டார்.
Tags:    

Similar News