மகளிர் சுய உதவிக்குழுகட்டிடத்தினை திறந்து வைத்த அமைச்சர் சாமிநாதன்

மங்கலம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுகட்டிடத்தினை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

Update: 2023-11-30 09:53 GMT

கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், மங்கலம் ஊராட்சி, வேட்டுவபாளையத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.73.05 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மேம்படுத்தும் பணி.  அமிர்தா கார்டனில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.75.45  லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடிம் என மொத்தம் ரூ.1.48 கோடி மதிப்பிலான திட்டங்களை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இதற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.  இதன் பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

எந்தவொரு திட்டமானலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை உடனடியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழுக்கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது. முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 என்கிற மகத்தான திட்டத்தை வழங்கியது வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக்குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம்  நம்மை காக்கும் 48, மக்களை தேடி மருத்துவம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு  அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுசாமி, மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் மருதாச்சலமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும்  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News