குமரியில்  நெகிழி பயன்பாட்டினை தடை செய்ய  வேண்டும்

கன்னியாகுமரி மாவட்ட கூட்டரங்கில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

Update: 2024-02-12 09:14 GMT
குமரி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் துறை சார்ந்த ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.  

பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ்  ஆய்வு மேற்கொண்டு  தெரிவிக்கையில் , கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), நெடுஞ்சாலைத்துறை, உட்பட பல்வேறு துறைகள் சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும் 6 அடி உறிஞ்சு குழிகள் அமைக்கவும், குப்பைகள் மற்றும் திடக்கழிவுகளை உரமாக மாற்றவும்,

சிறிய அளவு நெகிழிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,  அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பாலித்தீன் பைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்வதோடு, அபராதம் விதிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு,  உதவி ஆட்சியர் (பயிற்சி) ரஜத் பீட்டன்,   உட்பட அனைத்துத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Tags:    

Similar News