சேலம் மேயருக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு

தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு சிறப்பாக நடக்க பணியாற்றிய சேலம் மேயர் ராமச்சந்திரனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார்.

Update: 2024-01-25 02:07 GMT

மேயரை பாராட்டிய அமைச்சர் 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சிறக்க சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் முழு ஒத்துழைப்பு அளித்ததற்காக கட்சியின் இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மேயர் ராமச்சந்திரனுக்கு தங்க மோதிரம் அணிவித்து கவுரவித்து பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளார்.
Tags:    

Similar News