திருப்பூருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை
திருப்பூருக்கு நான்காவது குடிநீர் திட்டத்தை தொடங்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தரவுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 16:28 GMT
அமைச்சர் ஆய்வு
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பூருக்கு வருகை புரிவதையொட்டி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் இன்று திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா கலை கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
உடன் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல .பத்மநாபன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் உள்ளனர்.