அமைச்சர் உதயநிதி வருகை: அமைச்சர் ஆய்வு
அமைச்சர் உதயநிதி வருகையையொட்டி செயல்வீரர்கள்கூட்டம் நடைபெறும் இடத்தினை அமைச்சர் ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 09:38 GMT
ஆய்வு பணியில் அமைச்சர்
வருகின்ற மூன்றாம் தேதி திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே எல்லப்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார்.
அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.