மாநில உரிமைகளை அடகு வைத்தவர் ஈபிஎஸ் - உதயநிதி ஸ்டாலின்
மாநில உரிமைகளை அடகு வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆத்தூரில் நடந்த பிரசாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் பொழுது உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் நீங்கள் போடும் போட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு எனவும், இங்கே கூடி இருப்பவர்களை பார்த்தால் பிரச்சார நிகழ்ச்சி போல் இல்லாமல் நன்றி அறிவிப்பு கூட்டம் போல் இருப்பதாக தெரிவித்தார்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கௌதம சிகாமணியை நான்கு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள் அதைவிட அதிகமாக வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். ஆத்தூரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் இல்லை.நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் ஆனால் திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிட்டார்.
தேர்தல் வாக்குறுதியாக ஆத்தூரில் உயர் சிகிச்சை மையம், ரிங் ரோடு, அரசு மகளிர் கலை கல்லூரி, உள்ளிட்டவர்கள் கொண்டுவரப்படும் என தெரிவித்தார் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் 450 ரூபாய் இருந்த கேஸ் சிலிண்டர் விலைதற்போது 1200 ரூபாயாக இருப்பதாகவும் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் முதல்வர் கூறியது போல் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் தமிழக முழுவதும் உள்ள சுங்க சாவடிகள் அகற்றப்படும் அதேபோல் பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்டதை குறைக்கப்படும் எனவே ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் எல்லாம் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்