மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிய அமைச்சர்
மதுரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகைக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-01 15:23 GMT
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் உயர்கல்வி பயில எச்டிஎப்சி வங்கியின் பரிவர்தன் திட்ட மூலம் 97 மாணவ, மாணவிகளுக்கு 32லட்சத்து 83ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.