சேலத்தில் மாநில மாநாட்டிற்கு அமைச்சர் நன்கொடை

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக அமைச்சர் கீதாஜீவன் நன்கொடையாக ரூ.1 கோடி வழங்கினார். 

Update: 2024-01-19 15:38 GMT

சேலம் மாநாட்டிற்கு நிதியுதவி அளித்த அமைச்சர்

சேலத்தில் வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்காக நன்கொடையாக ரூ.1 கோடிக்கான காசோலையை திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் உடனிருந்தனர்..

Tags:    

Similar News