வளா்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 09:03 GMT
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே காந்தி காய்கறி சந்தை வணிக வளாகம் ரூ.22 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல் குழந்தை வேலப்பா் கோயிலைச் சுற்றி ரூ.8.64 கோடி செலவில் கிரிவலப்பாதை அமைக்கும் பணி, காப்பிலியபட்டி ஊராட்சியில் குப்பைகளைத் தரம் பிரித்தெடுத்து,
அதில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வளா்ச்சிப் பணிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் ப.வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி, ஒட்டன்சத்திரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவா் சி.இராஜாமணி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.