நான்காவது குடிநீர் திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்கள்

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நான்காவது குடிநீர் திட்ட தொடக்க விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார்.

Update: 2024-02-12 03:59 GMT

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற அரசு விழாவில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1281.46 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.மேலும் 20.51 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ர5020 பயனாளிகளுக்கு 60.44 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், அரசு முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கத் துறை கார்த்திகேயன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,தமிழ்நாடு குடிநீர் மேலாண்மை இயக்குனர் (குடிநீர் வடிகால் வாரியம்)தட்சிணாமூர்த்தி,மாநகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு,மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, துணை மேயர் பாலசுப்ரமணியம், தலைமை பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) செல்லமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் செல்வி ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, மண்டலத் தலைவர்கள் இல. பத்மநாபன், கோவிந்தசாமி கோவிந்தராஜ்,உமா மகேஸ்வரி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News