தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டை துவக்கி வைத்த அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன் குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது . ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும், போட்டியை காண பொதுமக்களும் குவிந்தனர்.

Update: 2024-01-07 04:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் தொடங்கிய 800 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்களும், கலந்து கொண்டுள்ளனர் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் தயார்படுத்தி வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளை தொடங்கும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். மேலும் இப்போட்டியை காண புதுக்கோட்டை மட்டுமல்லாது அருகில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்களும் அதே போல் புதுக்கோட்டை, திருச்சி ,மதுரை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த போட்டியினை தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெயநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சிரம்யா, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் KK.செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இருசக்கர மோட்டார் பைக் மிக்ஸி கிரைண்டர் சேர் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்டுகிறது. மொத்தம் பத்து சுற்றுள்ளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றிக்கு 30 பேர் கலந்து கொள்வார்கள் என கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News