மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் வாக்குசேகரிப்பு

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாக்குசேகரித்தாா்.;

Update: 2024-04-13 05:11 GMT
வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பேரவை தொகுதிக்குள்பட்ட துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு ஆதரவாக, தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்தாா். துவாக்குடி நகராட்சி பரகத் நகா், துவாக்குடி மெயின் ரோடு, கீழத்தெரு, மேலத்தெரு அய்யப்பன் நகா்,சக்திநகா் திருவள்ளுவா் தெரு, ராவுத்தான் மேடு கிழக்கு, ராவுத்தான்மேடு மேற்கு, இச்சிமரம், பெல்நகா், இந்திராநகா், முத்துராமலிங்க தேவா் சாலை உள்ளிட்ட பகுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Advertisement

அப்போது, அமைச்சா் பேசியது, உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழக முதல்வரின் கரத்தை மேலும் வலுப்படுத்த மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் அதிக வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். நிகழ்வில், வேட்பாளா் துரை வைகோ, துவாக்குடி நகர திமுக செயலா் காயாம்பூ, துவாக்குடி நகராட்சித் துணைத் தலைவா் லலிதா தேவி, தோ்தல் பணிக்குழு காா்த்தி உள்ளிட்டோா் வீதிவீதியாகச் சென்று வாக்குசேகரித்தனா்.

Ministry votes in favor of MDMK candidate

Tags:    

Similar News