மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2023-10-27 01:38 GMT
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
விருதுநகரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்ட விளையாட்டு மையத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தை தீடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம் மற்றும் செயற்கை ஹாக்கி விளையாட்டு மையம் மற்றும் நீச்சல் குளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் செய்யப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் அலுவலர்களிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வின் போது தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள பலர் கலந்து கொண்டனர்.