வீட்டின் முன் நிறுத்தபட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!

கோவையில் வீட்டின் முன் நிறுத்தபட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை செய்கின்றனர்.;

Update: 2024-04-29 09:06 GMT

கோவையில் வீட்டின் முன் நிறுத்தபட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை செய்கின்றனர்.  

திருச்சி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜன்.கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் ராமநாதபுரம் பகுதி ஆறுமுக நகர் இரண்டாவது வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.சனிக்கிழமை அன்று தனது காரை வீட்டின் வெளியே நிறுத்து உள்ளார்.இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் வெளியே வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து பதறியடித்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது வெளியே நிறுத்தபட்டிருந்த நாகராஜனுக்கு சொந்தமான சொகுசு கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கபட்ட நிலையில் அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் காரில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தடுக்க தண்னீரை பீய்ச்சி அடித்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் காருக்கு தீ வைத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜனின் வீட்டின் அருகில் வசிப்பவர் வீட்டில் சிசிடிவி பொருத்தபட்டிருந்த நிலையில் அது பழுதடைந்துள்ள காரணமாக குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெருக்கமான குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்து உள்ளது.

Tags:    

Similar News