மகளை காணவில்லை - தாய் காவல்நிலையத்தில் புகார்
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் 17 வயது மகளை காணவில்லை எனக் கூறி தாய் காவல்நிலையத்தில் புகார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-17 06:53 GMT
மகளை காணவில்லை - தாய் காவல்நிலையத்தில் புகார்
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் தமிழரசி இவருடைய 17 வயது மகள் கடந்த ஜனவரி மாதம் திருப்பூர் சென்று நர்சிங் வேலைக்காக தங்கி இருந்துவிட்டு அதன் பின்பு வீட்டிற்கு வந்ததாகவும் கடந்த 13ஆம் தேதி காலையில் தான் ஒருவரை காதலிப்பது ஆகவும் திருமணம் செய்து வைக்குமாறும் வீட்டில் கூறி உள்ளார். அதற்கு விட்டார் இரண்டு வருடம் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. அவருக்கு 18 வயது முடிய 3 மாதம் உள்ள நிலையில் கடந்த 13ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்ற அந்த 17 வயது சிறுமி தற்போது வரை வீடு திரும்பாததை அடுத்து அவருடைய மொபைல் நம்பர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.