இரண்டு குழந்தைகளுடன் பெண் மாயம் - காவல்துறையினர் விசாரணை
பெரும்பாலை அடுத்த நாகமரத்து பள்ளம் பகுதியில் இரண்டு குழந்தைகளின் தாய் காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் காவல்துறையினர் விசாரணை;
Update: 2024-03-15 06:41 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாலை பகுதியில் உள்ள நாகமரத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் பெங்களூரு பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி முத்தம்மாள் இவர்களுக்கு தேவிகா மற்றும் ராஜேஸ்வரி என இரண்டு மகள்கள் உள்ளன சில நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், முத்தம்மாள் அருகில் உள்ள சிவன் கோயிலில் தெருக்கூத்து பார்ப்பதற்காக செல்வதாக இரண்டு குழந்தையுடன் சென்ற முத்தம்மா பின்னர் வீடு திரும்பவில்லை அவர்களை எங்கு தேடியும் கிடைக்காததை அடுத்து, நேற்று பெரும்பாலை காவல் நிலையத்தில் ஈஸ்வரன் போர் அடித்தார் அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.