ஈரோட்டில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெப்படை பகுதியில்I.N.D.I.A கூட்டணி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேனில் இருந்த படி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில் சேவை செய்யுங்கள் பலனை எதிர்பாராதே நாளைநமதே நமதே என்ற வார்த்தையில் அனைத்து அடங்கி விடுகிறது மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று கூறிய பெரியார் பிறந்த ஊர் இது இரண்டையும் காக்க வேண்டிய நேரம் இங்கே மானமும் இருக்கிறது, அறிவும் இருக்கிறது என்று நாட்டிற்கு அறிவிக்க வேண்டிய நேரம். தற்பொழுது நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரம் தற்பொழுது நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நேரம் நாடு கெட்டது உங்களுக்கு தெரியாது ஏன் தெரியாமல் போனது என்றால் பொய் கணக்குகளை பிரிச்சில் வைத்து பூட்டியதால் தெரியாமல் போனது. நாடு நல்லா இருக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு திட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
உலக நாடுகளில் இந்தியா முக்கிய நாடாக மாறுகிறதா இல்லையா என்று பாருங்கள். எவ்வளவு நிதி ஒதுக்கியும் வட மாநிலங்கள் ஏன் இப்படி இருக்கிறது வட மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருகின்றனர். இதனால் உங்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்று புலம்புகிறீர்கள் யோசித்துப் பாருங்கள் அங்கு வேலை இல்லை இங்கு தான் வேலை இருக்கிறது. அங்கு வெறும் கோஷம் போட்டு நிற்கிறார்கள் ஆயிரம் உண்டு இங்கு ஜாதி இது அந்நியர் வாழ என்ன நீதி அந்நியமா நடந்துகிட்டா அப்படித்தான் சொல்லுவோம். எம் மொழி தமிழ் நம் மொழி தமிழ் 8 கோடி பேருக்கு அது மொழி அது வேண்டாமே என இதை கொடுத்தால் மறந்து விடுவோமா பண்பாடு கெட்டது மொழியில் இருந்து தொடங்குகிறது அது மேல் கை வைக்கிறார்கள் எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லை என்றால் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் கெட்டு போய்விடுவான். நல்லவனுக்கு இங்கே கெதி இல்லை என்றால் அவர் அவர்களுக்கு என்ன கதி வரி கட்டினால் தான் தேர் இழுப்பேன் என்று சொல்லுகிற மாடு இல்லை நான் ஏன் இந்த கூட்டத்தை பார்த்து பின்பு கூட தைரியமாக சொல்வேன். பரிவட்டம் கட்டினால் தான் தேர் இழுப்பேன் என்று சொல்லுகின்ற கூட்டம் இல்லை நாம் நாட்டுக்கு நல்லது நடந்தால் ஒன்று சேரும் கூட்டம் இது எய்ம்ஸ் என்னதான் ஆச்சு என் தம்பி உதயநிதி ஒட்டு மொத்த இளைஞர்களின் குரலாய் ஓங்கி ஒலிக்கிறார் ஒரு செங்கல்லை தூக்கி சுற்றினார் இப்பொழுது அதுவும் இல்லை என்கின்றனர் மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தோமே பத்து பைசா நிதி உதவி கொடுத்தார்களா நாம குடுக்கும் ஒவ்வொரு ரூபாய் வரிக்கும் 29 பைசா தானே கொடுக்கிறீர்கள் நீங்கள் ஒன்னுமில்ல நாங்கள் கொடுக்கும் வரிக்கு 29 பைசாவிற்க்கு பதிலாக ஒரு ரூபாய் கொடுத்து பாருங்களேன். நாங்கள் இப்பொழுது 29 பைசா வைத்துக் கொண்டு நாங்கள் இல்லத்தரசிகள் திட்டம் நான் என்று ஏன்ஙபெருமையாக சொல்கிறேன் என்றால் அந்தத் திட்டத்திற்கு முதலில் குரல் கொடுத்தது நான் அதனால்தான் பெருமை அதை செயல்படுதியவர்க்கு அதைவிட பெரிய பெருமை சிலிண்டர் விலை என்ன என கேள்வி கேட்ட பொழுது பொதுமக்கள் 1050 என கூச்சலிட்டனர் அப்பொழுது சிலிண்டர் விலை கேட்டால் வயிறு எரிகிறதா இல்லையா என கேள்வி எழுப்பினார் சோறு போடும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசுதே ஒரு அரசு அதை பார்த்து உங்களுக்கு கண் எரியவில்லை ஏன்னா எனக்கு எரிஞ்சது ஏன் என்றால் திங்கிற சோத்துக்கு நன்றி எனக்கு உண்டு அது உங்களுக்கும் உண்டு என்று எனக்குத் தெரியும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே பிரதமரா அதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும் சரி ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் 49 நாட்கள் கழித்துதான் நாம போட போகும் ஓட்டுக்கு ரிசல்ட் சொல்லுவாங்களாம் திருக்குறள் வாழ்க என்று மேடையில் பேசுகிறீர்கள் ஆனால் தமிழர் பெங்களூரில் குண்டு வைக்கப் பார்க்கிறார்கள் என்று புகார் சொல்கிறீர்கள் ஒரு பக்கம் இப்படி ஒரு பக்கம் அப்படி இது ஏன் இந்த கூட்டணி இதில் அரசியல் ஆதாயம் உண்டா என்று விமர்சனம் செய்கிறார்கள் இதில் எனக்கு என்ன ஆதாயம் என் கட்சிக்காரர்களுக்கு பதில் சொல்ல என்னால் முடியவில்லை ஏழு கேளுங்கள் நான்கு கேளுங்கள் மூன்று கேளுங்கள் என்றனர் நான் எதையுமே கேட்கவில்லை நியாயம் கேட்கிறேன் நியாயம் கேட்கும் பொழுது நம்மிடம் அப்பலுக்கு இருக்க கூடாது சுயநலம் என்ற சொல் நம்மை யாரும் விரல் காட்டி பேசிவிட கூடாது பொது எதிரியை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அமைத்த கூட்டணி இது அரசியல் தாண்டி அதையும் தாண்டி புனிதமான கூட்டணி இது உங்களுக்கு எந்த அரசு வேண்டும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய அரசா இல்லை சோறு போடாமல் நீட் தேர்வை வழங்கிய அரசா எந்த அரசு வேணும் பெண்களுக்கு உரிமை தொகை தரும் அரசா இல்லை மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை ஆற்றில் வீச செய்த அரசா மகளிர் சுய உதவி குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசா கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசு வேணுமா அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசு வேணுமா? இந்திய ஜனாதிபதியே ஆனாலும் அர்ச்சனையின் போது அங்கேயே நில்லு என்று சொல்லும் அரசு வேண்டுமா ஏழைகளுக்கான அரசா பணக்காரர்களுக்கான அரசா எது வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் நலத்திட்டங்களை வழங்க வேண்டிய அரசா அல்லது கொடுக்க வேண்டியது கொஞ்சம் கொடுத்துவிட்டு நான் பிச்சை போட்டேன் என்று சொல்லும் அரசா எல்லோரும் சமம் என்று சொல்லும் அரசா அல்லது மதத்தை வைத்து நாட்டை பிளக்கும் அரசா எனக்குத் தெரியும் அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் மதத்தையும் நாட்டையும் போட்டு பிணைந்த எந்த நாடு உறுப்பிட்டதாக சரித்திரம் கிடையாது இது உலகம் சொல்லும் சரித்திரம் நான் சொல்லவில்லை ராமரை அனுப்பி ஆட்சியில் கை வைக்கப்பார்க்கிறார்கள் இந்தியை திணித்து மொழி மீது கை வைக்க பார்க்கிறார்கள் 29 பைசா மட்டும் தந்து நம்ம வயிற்றில் கை வைக்கப்பார்க்கிறார்கள் பத்து வருஷமா இந்த மாதிரி அடி வாங்கிக் கொண்டே இருக்கிறோம் நாம் திருப்பி கொடுக்க வேண்டாமா அது நம் கையில் வேண்டாம் ஒரு விரல் போதும் நான் கை வைப்பதெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் நம் கை விரலில் மை வைக்க வேண்டும் பெரியார் இன்று இருந்திருந்தால் டெல்லிக்கு என்ன செய்தி அனுப்பி இருப்பாரோ இந்த செய்தியை நாம் ஓட்டுப் போடும்போது நினைவில் வைத்துக் கொண்டு ஓட்டு போட வேண்டும் திமுக வேட்பாளர் பிரகாஷ் ஈரோடு மேம்படுத்த பல திட்டங்களை வைத்திருக்கிறார் அதற்கு அவர் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் பொழுது நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நகரச் செயலாளர் என பலரும் உடன் இருந்தனர்.