விலையில்லா சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ

சேலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை எம்எல்ஏ அருள் வழங்கினார்.

Update: 2024-01-18 07:37 GMT

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசும்போது, மாணவ, மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும்.

சாலையில் சைக்கிளை பொறுமையாக ஓட்டி செல்ல வேண்டும். சாலைவிதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் அனைவருக்கும் பேனாவை பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், பா.ம.க.மாவட்ட துணை செயலாளர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர் இளங்கோ, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால், தளவாய்பட்டி ராமர், சீனிவாசன், விஜயகுமார், ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News