அதிமுக வேட்பாளருக்கு எம்எல்ஏ வாழ்த்து !

சிவகங்கை பாராளுமன்றத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை சந்தித்து எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-03-21 09:50 GMT

அதிமுக

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பனங்குடி பகுதியைச் சேர்ந்த சேவியர் தாஸை அதிமுக தலைமை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்த நிலையில் சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ செந்தில்நாதன் பனங்காடி பகுதியில் உள்ள சேவியர் தாஸ் வீட்டிற்கு நேரில் சென்று வேட்பாளருக்கு பொன்னாடை அணிவித்து இன்று வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக சிவகங்கை நகரச் செயலாளர் ராஜா, ஒன்றியச் செயலாளர்கள் கோபி உட்பட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News