விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரம்மாண்ட வெற்றிக்கு எம்எல்ஏ ஈஸ்வரன் பாராட்டு !

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பெற்றிருக்கின்ற பிரம்மாண்டமான வெற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்திருப்பதை நிருபிக்கின்றது.

Update: 2024-07-13 10:55 GMT

திமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பெற்றிருக்கின்ற பிரம்மாண்டமான வெற்றி தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்திருப்பதை நிருபிக்கின்றது. இன்னும் நிறைய திட்டங்களை அடித்தட்டு மக்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் செய்வார் என்று மக்கள் நம்புவதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றது. தமிழ்நாடு அரசு இன்னும் அதிக பாய்ச்சலோடு செயல்படுகின்ற ஊக்கத்தை, பொறுப்பை கொடுத்திருக்கிறது. எதிர்பார்த்த வித்தியாசத்தோடு அன்னியூர் சிவா அவர்கள் வெற்றி பெற வைத்திருக்கின்ற விக்கிரவாண்டி வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுடைய தேர்தல் பிரச்சாரங்கள் எடுபடவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றது. ஏன் பாமக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக பேசுகின்ற நிலையில் BJP தலைமையிலான கூட்டணி இல்லை என்பதை காட்டுகிறது. இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Tags:    

Similar News