ராஜேஷ்குமார் எம்பிக்கு ஈஸ்வரன் எம்எல்ஏ நேரில் வாழ்த்து

திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாரை கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2024-03-18 04:17 GMT

சால்வை அணிவித்து வாழ்த்து 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தொடக்கத்திற்கும், நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்தி வெளியான அறிவிப்பிற்கும், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பியை நாமக்கல் - மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் கொமதேக தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன்,மாநில செயற்குழு உறுப்பினர் துரை, மாவட்ட பொருளாளர் மணி மற்றும் கொமதேகவினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News