மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ
அரூர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடந்த விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.;
Update: 2024-02-09 07:27 GMT
மிதிவண்டி வழங்கல்
தர்மபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள புனித மரிஅன்னை மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கினார். நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என பல உடன் இருந்தனர்.