பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
ஐயங்கார்குளம் கிராமத்தில் ரூபாய் 18.83 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து பள்ளி கட்டிடங்கள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அன்பழகன் கல்வி நிதியிலிருந்து கட்டப்பட்டு வருகிறது.
அவ்வகையில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஐயங்கார்குளம் கிராம ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 159 மாணவர்கள் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளியில் பழைய கட்டிடம் மாணவர்கள் பாதுகாப்பு குறித்து குறைவாக உள்ளதாகவும், புதிய கட்டிடம் கட்டித் தர கிராம ஊராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை விடப்பட்டது.அதன் அடிப்படையில் ரூபாய் 18.81 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் சுமார் 80 மாணவர்கள் பயிலும் வகையில் கட்டப்பட்டது.
இதில் மின்விசிறி மின்விளக்கு டைல்ஸ் உள்ளிட்டவை அனைத்தும் பொருத்தப்பட்டு இன்று இதனை மாணவர்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் திறந்து வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபாரதி, ஓன்றிய செயலாளர் குமணன், ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் திருநாவுக்கரசு, ஓன்றிய குழு உறுப்பினர்கள் அன்பழகன், பரசுராமன் , தம்மனூர் தயாளன் , தட்சினாமூர்த்தி, வீரராகவன் தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.