சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த இடத்தில் எம்எல்ஏ ஆய்வு
சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-22 10:45 GMT
ஆய்வு செய்யும் எம்எல்ஏ
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் நேற்று பழங்குடியின பெண்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க ஏலமன்னா, பெருங்கரை உட்பட 3 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் 50 வன ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கவுள்ளனர்.
இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என கிராம மக்கள் அறிவுறுத்தப்பட்டர். இந்நிலையில் கூண்டு வைக்கப்பட்ட இடத்தில் கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஆய்வு மேற்க்கொண்டனர்.