அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை துவக்கி வைத்த எம்.எல்.ஏ
ஸ்மாட் வகுப்பு
கிராம்ப்புற அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு படங்களுடன் தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வியை வழங்க ஏதுவாக ஸ்மாட் வகுப்புகள் அமைக்கக்கோரி பல்வேறு பெற்றோர் ஆசிரியர்களிடமிருந்து மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதிக்கு பல்வேறு தரப்பினருடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , நல்லசெல்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , நகப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.2 லட்ச மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கினார். இதனையடுத்து புதியதாக பல்வேறு பகுதி பள்ளிகளில் அமைக்கப்பட்ட 8 லட்ச ரூபாய் மதிப்பிலான புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி திறந்து வைத்தார்.இந்த விழாவில் மாணவ - மாணவிகள் , பெற்றோர் , ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.