ஆட்சியரை சந்தித்த எம்எல்ஏ
தென்காசி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியரை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசித்தார்.
Update: 2024-02-01 01:26 GMT
தென்காசி மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ.கே.கமல் கிஷோரை அலுவலகத்தில் வைத்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ்.பழனி நாடார் மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தென்காசி மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய்கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் உடன் இருந்தனர்.