மக்களுடன் முதல்வர் திட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ முத்துராஜா!
Update: 2023-12-22 09:19 GMT
எம்எல்ஏ முத்துராஜா!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நகர் பகுதி மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 5வது நாளான இன்று வார்டு 15,16,17,18 ஆகிய நான்கு வார்டு பகுதி மக்களுக்காக புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை பார்வையிட்டு முதியோர் உதவித்தொகை, இருப்பிட சான்றிதழ், மின்வாரியத்தில் பெயர் திருத்தம், புதிய இணைப்பு போன்ற திட்டங்களில் பயன் பெற்றவர்களுக்கு அரசாணையை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா வழங்கினார். இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் செ.திலகவதி செந்தில் நகர்மன்றத் துணைத் தலைவர் லியாக்கத்அலி நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.