திருவாரூர் :கலைஞர் அறிவுசார் மையம் கட்டிட பணிகளில் ஆய்வு
திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் எம்எல்ஏ ஆய்வு;
Update: 2023-12-06 04:32 GMT
எம்எல்ஏ ஆய்வு
திருவாரூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் இன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் தெற்கு வீதியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திருவாரூர் நகர செயலாளர் பிரகாஷ் ,அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.