நூலகம் அமைக்கப்படும் இடத்தில் எம்எல்ஏ ஆய்வு
போரூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் இடத்தை எம்எல்ஏ கணபதி ஆய்வு செய்தார்.;
Update: 2024-01-24 07:55 GMT
எம்.எல்.ஏ ஆய்வு
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-151, போரூர், அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.90.00 இலட்சம் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் இடத்தை நேற்று மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி ஆய்வு மேற்கொண்டார். நூலகம் அமைவது குறித்து விரிவாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.