புதிய வழித்தட பேருந்தை வரவேற்க 3 மணி நேரம் காத்திருந்த எம்எல்ஏ

வேலூர் - தாம்பரம் புதிய வழித்தட பேருந்தை வரவேற்க மூன்று மணி நேரத்திற்கு மேலாக எம்.எல்.ஏ. எழிலரசன் பொதுமக்களுடன் காத்திருந்து அதில் பயணித்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

Update: 2024-01-26 03:52 GMT
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து உடனுக்குடன் சட்டப்பேரவையில் பேசி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன். அவ்வகையில் காஞ்சிபுரத்திலிருந்து விஷார் பெரும்பாக்கம் வழியாக ஆற்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.மேலும் இந்த வழித்தடத்தில் குறைந்த பேருந்துகளே செல்வதால் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், ஆற்காடு பணிமனை சார்பில் வேலூர் டூ தாம்பரம் பேருந்துகள் இந்த சாலை வழியாக செல்லும் வகையில் புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டு புதிய பேருந்து இன்று காலை 10:30 மணிக்கு துவக்கி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது . ஆற்காடு பணிமனையில் இந்நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற்றது. இந் நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி எல்லையான பெரும்பாக்கத்தில் அதனை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காலை 11 மணி அளவில் அப்பகுதிக்கு வருகை புரிந்தார். பணிமனையில் துவக்க விழா தாமதம் காரணமாக 3 மணி நேரம் பெரும்பாக்கம் பகுதியில் பொதுமக்களுடன் எழிலரசன் எம்எல்ஏ காத்திருந்து புதிய பேருந்தை வரவேற்க நிலை ஏற்பட்டது. இறுதியாக பிற்பகல் 2 மணி அளவில் பேருந்தை வரவேற்று பொதுமக்களுடன் பயணித்தார். இதனைத் தொடர்ந்து புல்லலூர் பகுதியில் புதிய பேருந்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு காலதாமதமாக செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டது. 
Tags:    

Similar News