அங்கன்வாடி மையத்திற்கு சேர் வழங்கிய எம்எல்ஏ
மேலப்பாளையம் 45 வது வார்டுக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் அமர்வதற்கான சேர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் வழங்கினார்;
By : King 24X7 News (B)
Update: 2023-11-17 13:15 GMT
சேர் வழங்கிய எம்எல்ஏ
மேலப்பாளையம் 45 வது வார்டுக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்திற்கு பத்தாயிரம் மதிப்புள்ள குழந்தைகள் அமர்வதற்கான சேர் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மேலப்பாளையம் மண்டல தலைவர் கஜிதா இக்லாம் பாசிலா மாமன்ற உறுப்பினர் அலி சேக் மன்சூர் மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல் வட்டச் செயலாளர்கள் TSMO உஸ்மான் ஜாலி மௌலானா குறிச்சி ஆனந்த் பள்ளி ஜமாத் தலைவர் முஸ்தபா யூசுப் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து காயல் மில்லத் பள்ளி அருகில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்திற்கும் குழந்தைகள் அமர்வதற்கான சேர் வழங்கப்பட்டது.