விவசாயிகளுக்கு நெல் விதைக்கும் எந்திரம் வழங்கிய எம்.எல்.ஏ
விவசாயிகளுக்கு சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் நெல் விதைக்கும் எந்திரங்களை வழங்கினார்.;
Update: 2024-06-20 01:18 GMT
விவசாயிகளுக்கு நெல் விதைக்கும் எந்திரம் வழங்கிய எம்.எல்.ஏ
சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் விவசாயிகளுக்கு தார்ப்பாய், நெல் விதைக்கும் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார். அப்போது ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தபேந்திரன், துணை இயக்குனர்கள் செல்வராசு, (தோட்டக்கலை) லதா மகேஷ், வேளாண்மை இணை இயக்குனர் (வணிகம்) சீனிராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் அருண், சோளிங்கர் வேளாண்மை உதவி இயக்குனர் பிரபு மற்றும் உதவி அலுவலர் மேகவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.