சேலம் மாநகராட்சியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

சேலம் மாநகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

Update: 2024-01-04 10:24 GMT

பணிகளை ஆய்வு செய்த மேயர்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்குட்பட்ட 6-வது வார்டில், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கோரிமேடு பண்டித்தெருவில் தடுப்புச்சுவர், ஜல்லிக்காடு மாரியம்மன் கோவில் தெரு, போஸ்ட் ஆபிஸ் தெருவில் புதிய மின் விளக்குகள், ராம் நகர் பகுதியில் புதிய வடிகால் ஓடை, சின்னகொல்லப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி ஆகியவை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதையடுத்து பெரிய கொல்லப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் சுகாதார வளாக கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்கள், இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து 7-வது வார்டுக்கு சென்ற வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் ஆத்துக்காடு ஏ.டி.சி நகர் வரட்டாறு தரைமட்ட பாலத்ைத உயர்மட்ட பாலமாக உயர்த்தவும், அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டவும், கம்பர் தெரு, வசந்தம் நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தார்சாலை, மழைநீர் வடிகால் வசதி அமைக்க வேண்டியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வில் துணை மேயர் சாரதாதேவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் அன்புச்செல்வி, சுபாஷ்சுந்தர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News