உங்கரான அள்ளி ஊராட்சியில் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ
உங்கரான அள்ளி ஊராட்சி பகுதிகளில் ரூ.27.50.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை மற்றும் 10,000.லிட்டர் OHT டேங் அமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Update: 2024-02-17 11:41 GMT
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட,உங்கரான அள்ளி ஊராட்சி,ஏமக்குட்டியூர்,பா.குளியனூர்,தா.குளியனூர், ஆகிய பகுதிகளில் ரூ.27.50.இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை மற்றும் 10,000.லிட்டர் OHT டேங் அமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஊர் முக்கியஸ்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.