ஆலங்குளம் அருகே புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்க எம்எல்ஏ கோரிக்கை
ஆலங்குளம் அருகே புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்க எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-29 09:18 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சிக்கு விரைவில் புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். தொகுதி மக்களின் நீண்ட கால கனவு திட்டமான இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றி தருவதாக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தொடரில் இதற்கும் நிதி ஒதுக்க வேண்டுமென தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சட்டசபையில் பேசினார்.