பூந்தமல்லி: தொடரும் செல்போன் திருட்டு

பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதியில் தொடரும் செல்போன் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.;

Update: 2024-05-22 13:00 GMT

கோப்பு படம்

பூந்தமல்லி நகராட்சியில், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வாடகை வீட்டில் தங்கி தொழிற்சாலை மற்றும் உணவகங்களில் பணியாற்றுகின்றனர். கோடை வெயில் தாக்கத்தால், இரவு நேரத்தில் மொட்டை மாடியிலும், அறையின் கதவுகளை திறந்து வைத்தும் துாங்குகின்றனர். பகல் முழுதும் கடினமான பணிகளுக்கிடையே, இரவு வடமாநில தொழிலாளர்கள் அயர்ந்து துாங்கும் போது, வீட்டின் உள்ளே புகும் மர்ம நபர்கள் மொபைல் போன்களை திருடி செல்கின்றனர்.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன், பூந்தமல்லி அம்மன் கோவில் தெருவில், ஒரே இரவில் 10 மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை என, வடமாநில தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். போலீஸ் ரோந்தை தீவிரப்படுத்தி, மொபைல் போன் திருடும் கும்பலை, போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News