மோடி 15 பைசா கூட மோடி தரவில்லை: நடிகர் வாகை சந்திரசேகர்
வெளிநாட்டு வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தரும் என சொன்ன மோடி 15 பைசா கூட தரவில்லை என நடிகர் வாகை சந்திரசேகர் விமர்சனம் செய்துள்ளார்.
வெளிநாட்டு வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தரும் என சொன்ன மோடி 15 பைசா கூட தரவில்லை விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து வாகை சந்திரசேகர் பேச்சு .. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரை ஆதரித்து விருதுநகர் வி வி ஆர் சிலை அருகில் திமுக கழக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வாகை சந்திரசேகர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் அதற்குப் பிறகு சத்துணவு திட்டமாக கொண்டு வந்தர் எம்ஜிஆர் அதன் பிறகு டாக்டர் கலைஞர் அவர்கள் குழந்தைகளுக்கு வாரம் ஐந்து முட்டைகள் மதிய உணவுயோடு வழங்கினார்.
முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைக்கனி வழங்கினார் இதையெல்லாம் தாண்டி நம்மிடம் தமிழர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காலையிலே நமது தாய்மார்கள் வேலைக்கு போவதற்கு ஏதுவாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சமைக்க நேரமில்லை காரணமாக இதை அறிந்த ஸ்டாலின் அவர்கள் காலையிலே சிற்றுண்டி உணவுத் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார் இதைப் பார்த்த இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் காலை உணவு திட்டத்தைபின்பற்ற ஆரம்பித்து விட்டதாகவும்,
இந்தத் திட்டங்களுக்கு ஒரு பைசா கூட ஒன்றிய அரசு மோடி தரவில்லை எனவும் மோடி அவர்களுக்கு வள்ளுவர் மற்றும் பாரதியாரை பிடிக்கும் என்றும் தமிழ் வாழ்க என்றும் கூறுவார் ஆனால் தமிழர்களை பிடிக்காது தமிழ் நாடும் பிடிக்காது என்றும் குற்றம் சாட்டினார் வெளிநாடு வங்கியில் உள்ள கருப்பு பணத்தை கைப்பற்றி மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்ச ரூபாய் தரப்படும் என மோடி தெரிவித்தார்.
15 பைசா கூட தரவில்லை என்றும் மக்களின் வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு உலகம் முழுதும் மோடி சுற்றிக் கொண்டுள்ளார் இந்தியாவை மறந்து விட்டார் எனவும் தற்போது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் குழி தோண்டி புதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மோடி செயல்படுகிறார் எனவும் இந்த தேர்தல் மிக முக்கியமானது தேர்தலாகவும் கருதப்படுகின்றது நாம் என்ன உடை உடுத்த வேண்டும் என்ன உணவு சாப்பிட வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் என்ன சாமி கும்பிட வேண்டும்? என்ன மொழி பேச வேண்டும் என அதற்கு தமிழ்நாடு என்றும் தலைவணங்காதெனவும் இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் அனைவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் இந்த பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது நகர மன்ற தலைவர் மாதவன் நகர செயலாளர் தனபாலன் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்