பணக்காரர்கள், தொழிலதிபர்களுக்கானது மோடி அரசு - திருச்சி சிவா

பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாதகமான அரசு மோடி அரசு என விருதுநகர் பரப்புரையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசினார்.

Update: 2024-04-11 08:52 GMT

திருச்சி சிவா

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூரை ஆதரித்து  விருதுநகரில் திமுக பாராளுமன்ற உறுப்பினர்  திருச்சி சிவா  பரப்புரை மேற்கொண்டார்.

அப்பொழுது பேசிய அவர், இன்னும் ஒன்பது நாட்களில் எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தை மாற்றஇருக்கிற உங்கள் முன்னால் கை சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவு தாருங்கள் என்றுஉங்கள் முன்னால் உரையாற்றுகிறேன் இந்தியா ஜனநாயக நாடாக இருக்குமா எனவும் ஜனநாயக நாடு என்று சொன்னால் நடுவீதியில் நின்று அரசாங்கத்தை விமர்சிக்க கூடிய உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு ஆனால் தற்போதைய பாஜக ஆட்சியில் நாடாளுமன்றத்திலேயே எங்களைப் பேசஅனுமதிக்கவில்லை என்றும் மீறிப் பேசினால் எங்களை தூக்கி வெளியே எறிந்து விட்டு வெளியே நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்குகிறார்கள் .பலி சுமத்தினார்கள் உண்மை அதுவல்ல ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது .

இந்துக்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து வாழும் இந்த நாட்டில்ஒரு மதம் தான் இருக்கும் என்று அச்சம் உருவாகி இருக்கிறது. பல மொழிகள் பேசும் இந்த நாட்டில் இந்தி மொழி மட்டும்தான் இருக்கும் என்று மோடி ஆட்சியில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்றும், மோடி பதவி ஏற்ற 10 ஆண்டுகளில் 108 தடவை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் குருடு ஆயில் விலை அதிகமாக இருந்தது. அப்பொழுது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 60 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை 500 ஆக இருந்தது ஆனால் தற்போதைய மோடி ஆட்சி காலத்தில் குருடு ஆயில் விலை குறைந்திருக்கிறது.

ஆனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியும் கேஸ் விலை விலை 1000த்தை தாண்டி விட்டது என்றும் ஏழை மக்களிடம் சிறுக சிறுக அவருடைய அத்தியாவசிய பொருட்களின் மூலம் வசூலித்த வரி பணம் குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில்பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் மூலமாக அவர் சம்பாதித்த பணம் ஏழே முக்கால் லட்சம் கோடி,அரசாங்க நிறுவனத்தை தனியாருக்கு விற்றதில் நான்கரை லட்சம் கோடி என்றும் ஒரு சிறு வியாபாரி வங்கியில் கடன் கேட்டு சென்றால் வாரண்டி இருக்கா கேரண்டி இருக்கா என்று கேட்டு விட்டு கடன் இல்லை என்று சொல்கிறார்கள் ஆனால் தற்போதைய மோடி ஆட்சியில் அப்படி வசூலித்த பணத்தை பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு பத்தாயிரம் கோடி பனிரெண்டாயிரம் கோடி என்று கேட்காமலேயே கொடுத்தார்கள், அவர்களும் வங்கியில் கடனை வாங்கி விட்டு வாங்கிய கடனை கட்ட முடியாது என்று கூறி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள் அவர்களை பிடிக்க வழியில்லாமல் அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த அரசு இந்த மோடி அரசு என்றும்,பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் சாதகமான அரசு தான் இந்த மோடி அரசு என்றும் பேசினார்,

கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்ன மோடி அரசு 500 ரூபாய் நோட்டை ஒழித்தார் அப்பொழுது வங்கிகளில் வரிசையில் நின்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வெயிலில் நின்று நோட்டை மாற்ற முடியாமல் இறந்து போனார்கள் திமுக ஆட்சியில் பெண்கள் பேருந்தில் சென்றால் அவர்கள் கட்டணம் இல்லை என்று கூறி குடும்பத்தலைவிக்கு மாதம் 900 ரூபாய்குறைத்து இருக்கிறோம் மகளிர் உரிமைத் தொகை 1000 கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சத்துணவு திட்டம்கொண்டு வந்த அரசு திமுக அரசு என்றும் எனவே திமுக ஆட்சி ஏழை மக்களுக்கானா ஆட்சி என்றும் தற்போதைய மோடி ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சி என்றும் குற்றம் சாட்டினார் .

ஒரு காலத்தில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்அனைவருக்கும் ஓட்டுரிமை கிடையாது எனவும், சொத்துவரி மற்றும் வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டும்தான் ஓட்டுரிமைஅந்த நேரத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 21 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை உண்டு என்று சட்டத்தை இயற்றினார்கள் அந்த சட்டத்தையும் ஒரு சில பேர் ஏற்கவில்லை இவ்வளவு பெரிய பொறுப்பை இவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று எதிர்த்தார்கள் ஆனால் ஏழை,எளியவர்களின் வரிப்பணத்தில் தான் அரசாங்கம் நடக்கிறது எனவும்,அவர்கள் வீட்டு வாசலில் ஓட்டு கேட்டு போவதற்காக சென்று வர வேண்டும் என்று சொல்லி இந்த சட்டத்தை இயற்றினார்கள் வெள்ளம் புயல் வந்த போது கூட வராத மோடி தற்பொழுது தமிழ்நாட்டிற்கு பத்து தடவை வந்துள்ளார்கள் அதற்கு காரணம்உங்கள் கையில் இருக்கும் ஓட்டுரிமை நீங்கள் தான் இந்த நாட்டை ஆளப்போவது யார் என்று தீர்மானிக்கும் எஜமானர்கள் நீங்கள் யாரும் சாதாரணமானவர்கள் அல்ல தயவு செய்து உங்கள் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை உடனே அகற்றி விடுங்கள் என்றும் பேசினார்.

  மேலும் பேசும் பொழுது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தேர்தல் சமயத்தில் வாக்கு செலுத்த வாக்குச் சாவடிக்கு செல்லும் பொழுது தான் ஆட்டோக்காரனையும். அம்பானியையும் ஒன்றாக பார்க்கிறார்கள் நீங்களும் மோடியும் ஒன்று நீங்கள் அனைவரும் வைத்து இருக்கின்ற அந்த வாக்குச் சீட்டு உங்களின் உரிமைச் சீட்டு நாட்டை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கக் கூடிய எஜமானர்கள் நீங்கள்தான் தற்போது வரை நான் யாரையும் அவதூறாக பேசவில்லை ஏன் என்றால் நான் கலைஞரின் வளர்ப்பு நான் உங்களிடம் ஆதரவு திரட்ட தான் வந்திருக்கிறேனே தவிர யாரையும் அவதூறாக பேச வரவில்லை என்றும் கடந்த 19ஆம் தேதி நடக்கின்ற தேர்தல் பணக்காரர்களுக்கு சாதகமாய் இருந்து ஏழை மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் பாஜக அரசை அகற்றிவிட்டு இந்தியா கூட்டணி வருவதற்கு ஆதரவை தாருங்கள் என்று பொதுமக்களிடையே பேசினார்

Tags:    

Similar News