ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணகளின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-20 12:08 GMT
பணம் பறிமுதல்
வேலூர் மக்களவை தொகுதியிற்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகண சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கொண்டுச்செல்லப்பட்டது தெரியவந்தது.
உடனடியாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அப்பணத்தை ஆம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர், பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் தர்பகராஜ் ஆய்வு செய்த பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆம்பூர் சார்நிலைக்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.