மோட்டார் பம்பு செட் வாங்குவதற்காக கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் !
பரமத்திவேலூர் அருகே விவசாய மோட்டார் பம்பு செட் வாங்குவதற்காக கொண்டு சென்ற ஒரு 57,500 விவசாயிகளிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ;
By : King 24x7 Angel
Update: 2024-03-21 04:41 GMT
பறிமுதல்
பரமத்தி வேலூரை அருகே உள்ள பொய்யேரி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துசாமி விவசாயி இவர் நேற்று இரவு பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் இருக்கு மோட்டார் கடைக்கு பம்புசெட் வாங்குவதற்காக 57 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது பரமத்தியை அடுத்துள்ள ஓவியம்பாளையம் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவர் சென்ற காரை நிறுத்தி ஆய்வு செய்தனர் சோதனை நடத்தினர் அப்போது அவரிடம் 57 ஆயிரத்து 500 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைக்கு விதிமுறையின் படி 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்வதால் அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தை பரமத்தி வேலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.