செங்கல்பட்டு: ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட இரண்டரை லட்சம் பறிமுதல்
செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில் அருகே 2.50 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யும் பணியில், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, சிங்கபெருமாள்கோவில் -- அனுமந்தபுரம் சாலையில் உள்ள தென்மேல்பாக்கம் பகுதியில், பறக்கும் படை பிரிவு தாசில்தார் புஷ்பலதா மற்றும் குழுவினர், அவ்வழியாக சென்ற காரை மடக்கி, நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, சிங்கபெருமாள்கோவில், திருத்தேரியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், 27, என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற, 2. 50 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்பின், பறிமுதல் செய்த பணத்தை, செங்கல்பட்டு சட்டசபை உதவி தேர்தல் அலுவலர் மற்றும் சப் -- கலெக்டர் நாராயண சர்மாவிடம், தாசில்தார் மற்றும் குழுவினர் ஒப்படைத்தனர்.