உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்
வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-03-27 15:36 GMT
பணம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி-திண்டிவனம் சாலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.